துருக்கியில் இன்றும் நிலநடுக்கம்

அங்காரா: துருக்கியின் அங்காரா மாகாணத்தின் மத்திய அனடோலியா பகுதியில் அமைந்துள்ள கோல்பாசி நகரில் இன்று கலை 8.43 மணிக்கு 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று அதிகாலை ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின.

இடிபாடுகளில் சிக்கி இதுவரை 4,372க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: