கடும் பனிப்பொழிவால் திடீரென ஊட்டியாக மாறிய செங்கல்பட்டு: ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் கடும் பனிப்பொழிவு காரணமாக திடீரென ஊட்டி போன்று மாறியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பழவேலி, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோயில், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் இன்று அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகனங்கள் அனைத்தும் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றது. முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு கொண்டு வாகனங்கள் சென்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், வாகனம் ஓட்ட முடியாமல் மிகவும் சிரமத்துடன் சென்றனர்.

பொழுது விடிந்தும்கூட வாகனங்கள், முகப்பு விளக்குகளை ஒளிர விட்டே சென்றனர். அந்த அளவிற்கு கடும் பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் காணப்பட்டது. சமீப காலமாக பனி மற்றும் குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கியது போன்று இருந்து வந்த நிலையில், இன்று கடும் பனிப்பொழிவு நிலவி குளிர்க்காற்று வீசியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். அதே போல தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களும் மெதுவாக சென்றது. பயணிகள் நடுங்கியபடி பயணித்தனர்.

Related Stories: