ரஜினி பட தயாரிப்பாளர் திடீர் மரணம்

சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஹேம்நாக் பாபுஜி (76), உடல்நலக்குறைவு காரணமாக திடீரென்று இன்று மரணம் அடைந்தார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காளி’, ‘கர்ஜனை’ ஆகிய படங்களை தயாரித்திருந்த அவர், கின்னஸ் சாதனைக்காக ஒரேநாளில் 14 இயக்குனர்கள் இணைந்து இயக்கிய ‘சுயம்வரம்’ என்ற படத்தையும் தயாரித்திருந்தார்.

சினிமாவில் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். மறைந்த ஹேம்நாக் பாபுஜிக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: