தடுப்பு கட்டை மீது மோதி தீப்பிடித்து எரிந்த கார்: சென்னை வாலிபர் தப்பினார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தடுப்புக்கட்டையின் மீது மோதி கார் தீ பிடித்து எரிந்து முழுவதும் சேதமானது. இதில் பயணம் செய்த சென்னை வாலிபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த முத்தையன் மகன் திலீபன் செல்வகுமார் (32). இவர் சொந்த வேலை காரணமாக காரில் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் சென்று வேலையை முடித்துவிட்டு, பின்னர் தனது வீட்டிற்கு செல்ல கோயம்புத்தூரில் இருந்து நேற்று இரவு கிளம்பி சென்னை வந்து கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வாழவந்தான்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதியது. அப்போது, கார் திடீரென்று தீப்பிடித்து சாலையிலேயே எரிந்தது. உடனடியாக காரில் இருந்து இறங்கி செல்வகுமார் உயிர் தப்பினார். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: