செம்பனார்கோயில் பகுதியில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று நெல் கொள்முதல்-விவசாயிகள் மகிழ்ச்சி

செம்பனார்கோயில் : செம்பனார்கோயில் பகுதியில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று 1,200 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் மறைமுக ஏல முறையிலும், பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்றும் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் செம்பனார்கோயில் அருகே வடகரை, மேமாத்தூர் பகுதி விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் சுமார் 1200 மூட்டை நெல் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது.அதன்படி சுமார் 400 மூட்டை நெல் கோ-50 ரகம் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.1,910க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,850க்கும் சராசரியாக ரூ.1,875க்கும், 800 மூட்டை நெல் உமா ரகம் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.1,675க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,610க்கும் விலைபோனது.

இதேபோல் விவசாயிகளின் இடத்திற்கே சென்று பரிவர்த்தனை செய்யப்படுவதால் போக்குவரத்து செலவு, ஏற்று கூலி, இறக்கு கூலி, கால விரயம் போன்ற செலவினங்கள் தவிர்க்கப்படுகிறது. மேலும் தேசிய வேளாண் மின்னணு திட்டத்தில் விற்பனை செய்யப்படுவதால் நல்ல விலையும், உடனடி பணமும் கிடைக்கப்படுகிறத என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: