நிலக்கோட்டை அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்காக கூடுதலாக 4 பேருந்து: தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு

திண்டுக்கல்: நிலக்கோட்டை அரசு காலை கல்லூரி மாணவிகளுக்காக கூடுதலாக 4 பேருந்துகளை இயக்க மாவட்ட நிருவாகம் முன்வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டியில் அரசினர் மகளிர் கலைக்கல்லுரி செயல்பட்டு வருகிறது. வத்தலகுண்டு அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்களின் பெரும்பாலானோர் அரசு பேரூந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கூட்டநெரிசல் மிகுந்த வேளைகளில் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் நிலை காணப்பட்டுள்ளது. மாணவிகள் வெகுநேரம் பேருந்துக்கு காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பெற்றோர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தநிலையில் மாணவிகளின் சிரமத்தை கவனத்தில் கொண்டு, அரசு கல்லூரி தொடங்கும் நேரம் மற்றும் நிறைவடியும் நேரங்களில் கூடுதலாக 4 பேருந்துகளை வத்தலகுண்டு அரசு போக்குவரத்து கழகம் வழிலாக கல்லூரி மாணவிகளுக்காக இயக்க ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.

தங்களது வெகுநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சில் உள்ள கல்லூரி மாணவிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கல்லூரி பேராசியர்களும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்த மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: