சிலியில் காட்டுத்தீயை அணைக்க போர் விமானத்தை ஈடுபடுத்திய அரசு!: பல ஹெக்டேர் வனப்பகுதியில் கருகிய விலங்குகள்..!!

சிலி: சிலி நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. தென்னாபிரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் கடும் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. வீசும் வெப்ப காற்றால் அங்குள்ள 2 லட்சத்து 70,000 ஹெக்டேர் நிலங்கள் தீயில் கருகியுள்ளன. கிட்டத்தட்ட 275 இடங்களில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறும் பெரு அரசு, சர்வதேச நாடுகளின் உதவியை கோரியுள்ளதுடன், போர் விமானத்தை தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

அது பல லிட்டர் நீரை எடுத்துச்சென்று பரவி வரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுதவிர தீயில் கருகிய விலங்குகளை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் சர்வதேச தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். சிலி காட்டுத்தீயில் இதுவரை 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர். காட்டுத் தீயால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகவும், வானம் செந்நிறமாகவும் தொடர்ந்து காட்சியளித்து வருகிறது.

Related Stories: