ஈபிஎஸ் - ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பில்லை!: அதிமுகவில் எது நடந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு நடக்கவே நடக்காது.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..!!

சென்னை: பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்திக்க வாய்ப்பில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈபிஎஸ் - ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பாக எதுவும் நடக்கலாம் என கு.ப.கிருஷ்ணன் கூறிய நிலையில் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி செய்து முடியாத நிலையில் பொய் பரப்புரைகள் செய்யப்படுகிறது. பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்பது என்பதே முரண்பாடுதான். இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பேன் என சொல்பவர்கள் தென்னரசு பெயரை சொல்ல மறுப்பது ஏன்? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவின் பெயரை சொல்ல பன்னீர்செல்வத்துக்கு வாய் வலிக்கிறதா எனவும் அவர் சாடியுள்ளார். திமுக சார்பு நிலைப்பாட்டை எடுத்துள்ள பன்னீர்செல்வத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறிய ஜெயக்குமார், அதிமுகவில் எது நடந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு நடக்கவே நடக்காது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், எங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சந்திக்கும் வாய்ப்பு இல்லை என கூறினார்.

Related Stories: