சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி..!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்றுக் கொண்டார். விக்டோரியா கவுரிக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.

உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் பதவி ஏற்பு:

வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றனர். மாவட்ட நீதிபதிகளான ஆர்.கலைமதி, ஜி.திலகவதி ஆகியோர் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்று கொண்டனர்.

விக்டோரியா கவுரி பதவியேற்றத்தை கண்டித்து போராட்டம்:

உயர்நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் விக்டோரியா கவுரி பதவியேற்றத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விக்டோரியா கவுரி:

விக்டோரியா கவுரி 1973ம் ஆண்டு மே 21ம் தேதி நாகர்கோவிலில் பிறந்தவர். 1995ம் ஆண்டு வழக்கறிஞராக பதவி செய்து கொண்டார். கன்னியாகுமரி, கரூர் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றியவர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி சிவில், கிரிமினல், வரி, தொழிலாளர் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். 2015 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் வழக்கறிஞராகவும், சி.பி.ஐ. வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். 2022 முதல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒன்றிய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார்.

Related Stories: