நீதிபதியாவதற்கான தகுதிகளை மட்டுமே பார்க்க முடியும்: விக்டோரியாவிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

டெல்லி: நீதிபதியாவதற்கான தகுதிகளை மட்டுமே பார்க்க முடியும்; அவர்களது சமூக வலைதள பதிவு அடிப்படையில் பின் தொடர முடியாது என கூறி  விக்டோரியாவிற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் அவர் பாஜக உடைய  முன்னாள் நிருவாகி என்றும் சிறுபானையினருக்கு எதிராக கவுரி பேசியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தது. அவருக்கு இந்த நியமனத்திற்கு எதிராக பல்வேறு வழக்கறிஞர்கள் தரப்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தது.

இதனிடையே விக்டோரியா கவுரி கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிரித்து மூத்த வழக்கறிஞர் வைகை உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கினை விசாரிக்கிருக்கிறது. ஏற்கனேவே சஞ்சீவ் கண்ணா, சுந்தரேஷ் நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது வேறு அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, சிறுபான்மையினருக்கு எதிராக இருந்திருக்கிறார் என்பது தான் எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பதவி ஏற்புக்கு தடை விதிக்க கோரிக்கை:

விக்டோரியா கவுரி பதவி ஏற்புக்கு உடனடியாக தடை விதிக்க மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து:

நீதிபதியை நியமிக்கும் போது அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளிடம் கொலிஜியம் கருத்து கேட்கும். பல்வேறு விஷயங்களையும் ஆராய்ந்து தான் கொலிஜியம் தங்களுக்கு பரிந்துரையை அளித்துள்ளது. அந்த கருத்துகளும் கொலிஜியத்தால் ஆராயப்படும்; மனுதாரர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாமலா இருக்கும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீதிபதி சஞ்சீவ் கண்ணா கருத்து:

நீதிபதியாவதற்கான தகுதிகளை மட்டுமே பார்க்க முடியும். நீதிபதிகளை அவர்களது சமூக வலைதள பதிவு அடிப்படையில் பின் தொடர முடியாது. அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதியாக பதவியேற்ற முன்மாதிரி உள்ளது என்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறினார்.

நீதிபதி கவாய் கருத்து
:

நானே மாணவனாக இருந்தபோது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்தவங்க இருந்திருக்கிறேன். நீதிபதியாக எனது அரசியல் பார்வையை நான் இதுவரை வர விட்டதில்லை என நீதிபதி கவாய் கருத்து தெரிவித்தார்.

விக்டோரியா கவுரி தகுதியற்றவர்: மூத்த வழக்கறிஞர் வாதம்:

நீதிபதியாக பதவி ஏற்க வழக்கறிஞர் விக்டோரியா கவுரி தகுதியற்றவர் என மூத்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் வாதம் செய்தார். அரசியல் விழுமியங்களுக்கு பொருத்தமற்றவர் என வாதிடப்பட்டது.

ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே முடிவு: நீதிபதி

ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 2018ல் இருந்து விக்டோரியா கவுரி பேசிய பேச்சுகள் இணையத்தளத்தில் உள்ளன; அவற்றை கொலீஜியம் குழு பார்த்து இருக்கும். அரசியல் பின்னணியில் உள்ளவர்கள் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றுள்ளனர்  என நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறினார்.

வழக்கறிஞர் வாதம்:

விக்டோரியா கவுரியை அரசியல் காரணத்துக்காக எதிர்க்கவில்லை; வெறுப்பு பேச்சுக்காகவே எதிர்க்கிறோம். விக்டோரியா கவுரி நியமனத்துக்கு அவசரமாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

நீதிபதி சஞ்சீவ் கண்ணா:

உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகதான் விக்டோரியா கவுரி பதவி ஏற்கிறார். கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பலர் நிரந்தரப்படுத்தப்படாமல் விடப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தை கலந்தாலோசித்தே கொலீஜியம் குழு, விக்டோரியா பெயரை பரிந்துரைத்தது என தெரிவித்தார்.

எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது: வழக்கு தள்ளுபடி

விக்டோரியா கவுரி நியமனத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Stories: