பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கடும் பனி மூட்டம்

தஞ்சை: பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். பட்டுக்கோட்டையில் இன்று அதிகாலை முதல் காலை 9 மணி வரை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. கடும் பனி மூட்டம் நிலவியதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் சென்றன.  

Related Stories: