×

துருக்கி, சிரியா நிலநடுக்கம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: துருக்கியில் ஏற்ப்பட்டுள்ள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு உயிரை இழந்த, காயமுற்ற மக்களை நினைத்து நான் வேதனைப்படுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிரியா மற்றும் துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ தூண்டியுள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக மீட்பு பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என துருக்கி அறிவித்துள்ளது. ஈராக், எகிப்து உள்ளிட்ட நாடுகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தியாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிகளை செய்து வருகிறது.

நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை ஐரோப்பிய ஒன்றியம் மீட்பு படையினரை அனுப்பியுள்ளது. இந்தியத் தரப்பிலிருந்து மருத்துவர் குழு, அத்தியாவசிய மருந்துகளை அனுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 100 வீரர்களை இந்தியா அனுப்பியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது :-

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த பேரழிவில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உயிரை இழந்த, காயமுற்ற மக்களை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். இந்த துயரமான நேரத்தில் இரண்டு நாட்டு மக்களையும் நினைத்து எனது இதயம் வேதனைக்குள்ளானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம் என பதிவிட்டுள்ளார்.

Tags : Turkey ,Syria ,earthquake ,CM ,Stalin , Turkey, Syria earthquake; Let us all come together to help the affected people: CM Stalin
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்