நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா கவாய் அமர்வில் விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணை

சென்னை: விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை நீதிபதிகள் கஞ்சீவ் கண்ணா, கவாய் அமர்வு விசாரிக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. விக்டோரியா கவுரி கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிரித்து மூத்த வழக்கறிஞர் வைகை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா கவாய் அமர்வு இந்த வழக்கினை விசாரிக்கிருக்கிறது ஏற்கனேவே சஞ்சீவ் கண்ணா, சுந்தரேஷ் நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது வேறு அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணை என்பது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

வழக்கறிஞர் விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்றத்தின் உடைய கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் அவர் பாஜவின் உடைய முன்னாள் நிருவாகி என்றும் சிறுபான்மைக்கினர் எதிராக கவுரி பேசியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தது. அவருக்கு இந்த நியமனத்திற்கு எதிராக பல்வேறு வழக்கறிஞர்கள் தரப்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் வைகை என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துருந்தார். அந்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்கு வந்துள்ளது.

பாரதி ஜனதா கட்சியை சேர்ந்த விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமிக்க தடை கூறிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் விசாரணை துவங்கியிருக்கிறது. ஏற்கனவே இந்த வழக்கின் உடையை விசாரணை என்பது நேற்றைய தினம் நீதிபதிகள் முன்பு விசாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அமர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த எம். எம். சுந்தரேசன் நீதிபதியாக இருப்பதால் அவர் இந்த வழக்கை விசாரிக்க நான் விரும்பவில்லை என்று தெரவித்ததை தொடர்ந்து. இன்று காலையில் உச்சநீதிமன்றத்தின் உடைய தலைமை நீதிபதி சந்திராசுட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் மற்றும் ஏ. எம். ஜோசப் ஆகியோர்கள் விசாரணை நடைபெறும் என்று கூறியுள்ளார்கள்.

Related Stories: