பெருவில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம்!!

லிமா : பெரு நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. பெரு நாட்டில் கடந்த வாரம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தெற்கு அரேகொய்பா பிராந்தியத்தில் கொட்டித் தீர்த்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் செகோச்சா பகுதியில் இருந்த வீடுகள் பல இடிந்து விழுந்தன. சாலைகள் எங்கும் கட்டிட இடிபாடுகள் குவியலாக காட்சி அளிக்கின்றன. எதிர்பாராத இயற்கை பேரிடரில் செகோச்சாவில் 1000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலச்சரிவில் 36 பேர் உயிரிழந்த நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை தேடும் பணி தொடர்வதாகவும் கூறியுள்ளார். கனமழை காரணமாக தலைநகர் லிமா உட்பட 14 இடங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் எனவும் அந்நாட்டு பேரிடர் மையம் எச்சரித்துள்ளது.

Related Stories: