புதுக்கோட்டை மாவட்டம் அருகே அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்கள் சாதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நச்சாந்துப்பட்டியில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று ஒரு தங்கம், 4 வெண்கலம் என பதக்கங்களை வென்றுள்ளனர்.

நச்சாந்துப்பட்டியில் ராமநாதன் செட்டியார் என்ற அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாநில மற்றும் தேசிய அளவில் பாதகங்களை பெற்று சாதனை படைத்தது வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியிலும் பங்கேற்று ஜீவா, யோகேஸ்வரன், சரண்யா, முகிலன் மற்றும் கீர்த்திகா உள்ளிட்ட மாணவர்கள் ஒரு தங்கம் மற்றும் 4 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.

அரசு தனி கவனம் செலுத்தி கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் போட்டிகளில் வென்று பதக்கங்களை வென்று வந்த நச்சாந்துப்பட்டி ராமநாதன் செட்டியார் உதவி பெரும் மாணவர்களை ஆசிரியர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.    

Related Stories: