அதானி குறித்த விவாதத்தை தவிர்க்கவே மோடி முயற்சிப்பார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி:   காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாமல் தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் பிரதமர் மோடி செய்வார். பல கோடி லட்சம் ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். அதானிக்கு பின்னால் இருக்கும் அதிகார வர்க்கம் யார் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். அதானி பற்றி நாடாளுமன்றத்தில் பேச அரசு பயப்படுகிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு அனுமதிக்க வேண்டும். ஆனால் இதனை தடுப்பதற்கான முயற்சிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.

Related Stories: