ரூ.50 ஆயிரம் லஞ்சம் சார்பதிவாளர் கைது

சேலம்: சேலம் தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது தாயார் பெயரில் கொழிஞ்சிப்பட்டியில் உள்ள 17 சென்ட்டை தானசெட்டில்மென்டாக மகன் பழனிவேல் பெயருக்கு எழுதிக் கொடுக்க உடையாப்பட்டி ஒருங்கிணைந்த கிழக்கு பதிவுத்துறை அலுவலகத்தில் மனு செய்தார். இதற்கு சார் பதிவாளர் செல்வபாண்டியன், பத்திர எழுத்தர் கண்ணன் ஆகியோர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். அந்த பணத்தை  பத்திர எழுத்தர் கண்ணனிடம் பழனிவேல் கொடுத்தார். அவர் சார்பதிவாளர் செல்வபாண்டியனிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: