வேட்பு மனு தாக்கல் இன்று கடைசி நாள்: இதுவரை 59 பேர் மனுதாக்கல்

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி துவங்கியது. கடந்த 4ம் தேதி வரை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்பட 46 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று (7ம் தேதி) கடைசி நாள். இன்று அதிமுக வேட்பாளர் மற்றும் சுயேட்சைகள் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (8ம் தேதி) வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 10ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப (வாபஸ்) பெறுதலும், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். தொடர்ந்து தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுபவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளது. 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related Stories: