சென்னை: பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக நெல் கொள்முதல் செய்யும் பொழுது அதன் ஈரப்பதம் 19 சதவீதம் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்கஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் பிரதமருக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதி இருந்தார்.