துபாயில் உயிரிழந்த முஷாரப் உடலை எடுத்து வரும் சிறப்பு விமானம் தாமதம்

துபாய்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் உடலை  துபாயில் இருந்து எடுத்து வரும் சிறப்பு விமானம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் முன்னாள் அதிபரான பர்வேஷ் முஷாரப்(79) துபாயில் உள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். முஷாரப் உடலை பாகிஸ்தான் எடுத்துவந்து கராச்சியில் அடக்கம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். இதற்காக அவரது உடலை பாகிஸ்தான் எடுத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை 11.30 மணிக்கு சிறப்பு விமானம் முஷாரப் உடலுடன் பாகிஸ்தான் செல்வதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று குறிப்பிட்ட நேரத்துக்கு சிறப்பு விமானம் துபாய் வந்தடையவில்லை. இதனால் முஷாரப் உடலை பாகிஸ்தானுக்கு எடுத்து வருவதில் தாமதம் நிலவி வருகின்றது. முஷாரப் மனைவி ஷேபா, அவரது மகன் பிலால் மற்றும் மகள் ஆயிலா ஆகியோர் முஷாரப் உடலை பாகிஸ்தான் எடுத்து வருகின்றனர்.

Related Stories: