புதுடெல்லி: இந்தியா, மியான்மர், கிர்கிஸ்தான் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கால்பந்து போட்டித் தொடர் அடுத்த மாதம் இம்பாலில் நடைபெற உள்ளது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அம்மாநில முதல்வர் பிரேன் சிங், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) தலைவர் கல்யாண் சவுபே, பொதுச் செயலாளர் ஷாஜி பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர். முதல்வர் பிரேன் சிங் கூறியதாவது: இந்திய காலபந்து உலகத்துக்கு ஏராளமான வீரர், வீராங்கனைகளை மணிப்பூர் மாநிலம் வழங்கியள்ளது. நாடு முழுவதும் கால்பந்து விளையாட்டை பிரபலமாக்க ஏஐஎப்எப் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு கடமைப்பட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக மணிப்பூர் மாநில அரசு, ஏஐஎப்எப் உடன் இணைந்து பிஃபா சர்வதேச முத்தரப்பு கால்பந்து போட்டியை நடத்த உள்ளோம். இப்போட்டியில் இந்தியா, மியான்மர், கிர்கிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. போட்டிகள் அனைத்தும் இம்பா் குமான் லம்பக் அரங்கில் மார்ச் 22, 24, 26 தேதிகளில் நடைபெறும். ஏற்கனவே ஐ-லீக், துராந்த் கோப்பை கால்பந்து தொடர்களை நடத்திய அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. அதனால் இந்த சர்வதேச போட்டியையும் சிறப்பாக நடத்தி முடிப்போம்.