ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: வியாசர்பாடியில், ஒன்றிய அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடு தொகை இழப்பிற்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரே ஒன்றிய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் டில்லிபாபு தலைமை வகித்தார்.

இதில், சாமானிய மக்கள் கடின உழைப்பில் சேமித்த எஸ்பிஐ வங்கி முதலீடு, எல்ஐசி நிறுவனங்களின் முதலீடு தொகை இழப்பிற்கு காரணமான அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு எவ்வாறு வஞ்சிக்கிறது என்றும், அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டு இந்திய பொருளாதாரத்தை பின்னடைவுக்கு கொண்டு செல்வதாக கூறி, கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாநில துணை தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, இமையா கக்கன், மாநில செயலாளர்கள் அகரம் கோபி, முனீஸ்வர் கணேசன், ராஜமோகன், தமிழ்ச்செல்வன், விளையாட்டுத்துறை தலைவர் பெரம்பூர் நிசார், ரஜினி செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தண்டையார்பேட்டை: வடசென்னை காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் திரவியம் தலைமையில், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள எல்ஐசி நிறுவனத்தின் வாசலில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், மோடி மற்றும் அதானியும் சேர்ந்து எல்ஐசி மற்றும் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் கோடி மக்கள் முதலீட்டு பணத்தை தந்திரமாக கொள்ளையடித்த இமாலய ஊழலை கண்டித்தும், மக்களுக்கு பயன்படாத பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

Related Stories: