போலீசுக்கு டிமிக்கி கொடுத்த ரவுடி சிறையில் அடைப்பு

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு பகுதியில் கடந்த 2020ம் ஆண்டில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய புளியந்தோப்பு கேபி பார்க் 16வது பிளாக் பகுதியை சேர்ந்த ரவுடி ஆனந்த்பாபு (32) தலைமறைவானார். இவர், மீது பேசின்பிரிட்ஜ், புளியந்தோப்பு, ஓட்டேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும், பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடி பிரிவிலும் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த ஆனந்த்பாபு நேற்று புளியந்தோப்பு பட்டாளம் பகுதியில் சுற்றித் திரிவதாக புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையிலான தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பட்டாளம் மார்க்கெட் பகுதிக்கு சென்ற போலீசார், மதுபோதையில் சுற்றித் திரிந்த ஆனந்தபாபுவை கைது செய்தனர். மேலும், ஆனந்த்பாபு மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: