வீட்டில் மயங்கி விழுந்த அதிகாரி மரணம்

அண்ணாநகர்: உத்தரபிரதேசத்தை  சேர்ந்தவர் அனுப்பும் மீதுரா (46). இவர்,  நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வந்தார். கோயம்பேட்டில் உள்ள இந்தியன் ஆயில் அரசு குடியிருப்பில் மனைவி, இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மீதுரா திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், மேல் சிகிச்சைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில்,  தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இரவு பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் அங்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி, அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.   

Related Stories: