திற்பரப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள்

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பகலில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இதனால் மக்கள் நீர்நிலைகள் சார்ந்த சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல விரும்புகின்றனர். இதன் காரணமாக கோதையாறு அருவியாக கொட்டும் திற்பரப்பு அருவியில் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெயில் காரணமாக அருவியில் தண்ணீர் குறைவாக கொட்டி வருகிறது.

இருப்பினும் குறைந்த தண்ணீரில் மக்கள் நிறைந்த மனதுடன் ஜாலியாக குளித்து மகிழந்தனர். இதனிடையே கூட்ட நெரிசல் மற்றும் குறைவாக கொட்டும் தண்ணீரால் அருவியை ஒட்டிய நீச்சல் குளத்தில் சிறுவர்களுடன் சேர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டனர். அதுபோன்று அருவியின் மேல்புறத்தில் உள்ள தடுப்பணையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து, கோதையாற்றில் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

Related Stories: