ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகள் இல்லை எனக் கூறி மருத்துவர்கள் பணியாற்ற மறுக்க முடியாது: ஐகோர்ட் அறிவுரை

சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகள் இல்லை எனக் கூறி மருத்துவர்கள் பணியாற்ற மறுக்க முடியாது என உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. மருத்துவ மேற்படிப்பு முடித்த 19 மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற மறுத்து தொடர்ந்த வழக்கில் அறிவுரை வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்காக அரசு அதிக செல்வு செய்வவதால், அதற்கு பிரதிபலனாக மருத்துவர்கள் சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும். மருத்துவர்களை கடவுளக்கு நிகராக நோயாளிகள் மதிப்பதால், இது போன்று வழக்குகளை தொடுத்து நேரத்தை செலவழிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: