வாட்ஸ் அப் மூலம் வரும் இன்று இரவு மின் இணைப்பு துண்டிப்பு தகவலை நம்ப வேண்டாம்: மின் வாரியம் எச்சரிக்கை

சென்னை: மின் கட்டணம் செலுத்திய ரசீது பதிவேற்றப்படவில்லை. இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என மின் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மின்வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலம் ஒரு போலியான தகவல் பரப்பப்படுகிறது அதாவது கடந்த மாதம் மின் கட்டணம் செலுத்திய ரசீது இன்னும் பதிவேற்றப்படாததால் உங்களது மின் இணைப்பு இன்று இரவு துண்டிக்கப்படும்.

உடனடியாக மின் வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளவும் அல்லது குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணுக்கு ரசீதின் புகைப்படத்த அனுப்பவும் என குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. ஆனால் மின் வாரியம் இதுபோன்ற எந்த ஒரு செய்தியையும் அனுப்பவில்லை மின் நுகர்வோர் இதற்கு பதிலளிக்க வேண்டாம். மேலும் மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோர் மின்வாரிய அலுவலகத்திலோ அல்லது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Related Stories: