காவல் துறை சிறப்பு பணிக்குழு சார்பில் தேர்வு செய்யப்பட்ட 30 வீரர்களுக்கு 3 நாட்கள் சிறப்பு பயிற்சி

கோயம்பத்தூர்: கோயம்பத்தூர் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சிறப்பு பணிக்குழு சார்பில் 30 போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மூன்று நாட்கள் பயிற்சி முடிவடைந்ததும். தீவிரவாதிகளை ஒடுக்குவது, குற்றவாளிகளிடம் இருந்து பிணைக் கைதிகளை மீட்பது போன்ற ஒத்திகை சாகசங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தன. கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசாருக்கு கடந்த மூன்று நாட்களாக சிறப்பு பணிக்குழு சார்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த பயிற்சியில் கோவையிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 30 போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

சவாலான பயிற்சிகள் நிறைவடைந்தும் நடந்த வீரர்களின் ஒத்திகை சாகசங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தது. பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களின் மீட்பது தீவிரவாதிகளை ஒடுக்குவது உள்ளிட்ட சாகசங்களை அவர்கள் அரங்கேற்றினர். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வீரர்களின் ஒத்திகையை பார்வையிட்டார். பின்னர் பயிற்சி போலீசாருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவரே கவச உடைகளுடன் மூன்றாவது மாடியில் இருந்து கயிறு மூலம் இறங்கி சாகசத்தில் ஈடுபட்டது பாராட்டை பெற்றது. சிறப்பு பணிக்குழு சார்பில் நடைபெற்ற பயிற்சியின் முடிவில் இலக்கை நிர்ணயித்து சிறப்பாக செயல்பட்ட வீரர்களை காவல்துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். சவாலான பணிகளை எந்த சூழ்நிலையிலும் திறம்பட செய்யுமாறும் அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.  

Related Stories: