2022 ஜனவரியை விட கடந்த மாதம் இந்தியாவில் வாகன விற்பனை 14% உயர்வு: டீலர்கள் சங்கம் அறிவிப்பு

டெல்லி: 2022 ஜனவரியை விட கடந்த மாதம் இந்தியாவில் வாகன விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக டீலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இருசக்கர, 3 சக்கர வாகனங்கள், கார்கள், சரக்கு லாரிகள், வேன்கள் உள்ளிட்ட அனைத்தின் விற்பனையும் ஜனவரியில் உயர்ந்துள்ளன. இருசக்கர வாகனங்களின் விற்பனை 10 சதவீதமும் 3 சக்கர வாகனங்களின் விற்பனை 59 சதவீதமும் அதிகரித்துள்ளது. கார்களின் விற்பனை 22 சதவீதம், டிராக்டர்கள் விற்பனை 8 சதவீதம், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் விற்பனை 16 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பஜாஜ் வாகன விற்பனை 21 சதவீதம் குறைவு:

இந்தியாவின் முன்னணி வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 2,85,995 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2022 ஜனவரி மாதத்தை காட்டிலும் 21 சதவீதம் குறைவாகும். கடந்த மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஏற்றுமதியும் 47 சதவீதம் குறைந்துள்ளது.

Related Stories: