பொதுமக்களின் விருப்பப்படி பேனா சின்னம் அமைக்க வேண்டும்: திருமாவளவன்

சென்னை: பொதுமக்கள் வரவேற்க கூடிய வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு பேனா சின்னம் அமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்க்கட்சிகள் போட்டியிட்டாலும் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு உறுதியாக இருக்கிறது. நானும் பரப்புரையில் அடுத்த வாரம் கலந்து கொள்ள இருக்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சியில் களப்பணி செய்பவர்களுக்கே நிதி வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு ஆடியோவில் பேசி இருப்பார்.

இடைத் தேர்தல் நியாயமாக நடக்கும். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைப்பது அவசியமானது. அதேவேளையில் பொதுமக்கள் அனைவரும் வரவேற்கும் கூடிய வகையில் நினைவு சின்னம் இருக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை கவனத்தில் கொண்டு முடிவு எடுப்பார் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: