திருப்பத்தூர் நகராட்சியில் பைப் லைன் உடைந்து வீணான காவிரி கூட்டு குடிநீர்-ஊழியர்கள் சீரமைத்தனர்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் பகுதியில் பைப் லைன் உடைப்பால் வீணாக ஓடிய காவிரி கூட்டு குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து வீணானது.திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகளில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இவர்களுக்கு தென்பெண்ணை பாலாறு, மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மெயின் ரோடு, புதுப்பேட்டை ரோடு ஜங்ஷன் சாலையில் காவிரி கூட்டு குடிநீர் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டு அதனை சீர் செய்யும் பணியில் குடிநீர் வடிகால் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது பைப்லைன் உடைப்பில்  காவிரி கூட்டுக்குடிநீர் தண்ணீர் பீய்ச்சி அடித்து சாலை முழுவதும் குடிநீர் மழை வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதனை தடுக்க முடியாமல் அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்துறை அதிகாரிகள் பெரும் அவதிப்பட்டனர். தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காலை வரை இந்த குடிநீரானது சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லிட்டர் தண்ணீர் வெளியேறி ஓடியது. அதன் பின்னர் நேற்று காலை குடிநீர் வடிகால் வாரியத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இந்த வீணாக செல்லும் தண்ணீர் மற்றும் குடிநீரை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து இந்த பணிகளானது நேற்று மதியம் 12 மணியளவில் முடிவடைந்து. பின்னர் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர் நிறுத்தப்பட்டது.

Related Stories: