கேரளாவில் இருந்து கூடலூருக்கு 30 கிலோ புகையிலை கடத்திய இருவர் கைது

ஊட்டி : கேரளாவில் இருந்து கூடலூருக்கு ரூ.1.12 லட்சம் மதிப்புள்ள 30  கிலோ புகையிலையை பொருட்கள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் இருந்து கூடலூருக்கு, சட்டவிரோதமாக  கட்டுமான பொருட்கள் ஏற்றி வரும் லாரியில் குட்கா உள்ளிட்ட  புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கூடலூர் காவல்துறையினருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூடலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ரமேஷ்குமார் மற்றும் காவல்துறையினர், ேகாழிப்பாலம் வழியாக கேரளாவில்  இருந்து தேவர்சோலை, பாடந்தொரை பகுதிக்கு ஜல்லி மற்றும் கற்கள் ஏற்றி வந்த  லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் லாரியில் சட்ட விரோதமாக 1,500  பாக்கெட்கள் கொண்ட 100 பண்டல் ஹான்ஸ் இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 30 கிலோ எடை கொண்ட இவற்றின்  மதிப்பு ரூ.1.12 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து கேரளாவில் இருந்து லாரி மூலம்  புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததாக வழக்குப்பதிவு செய்து கேரளா மாநிலம்  மாம்பாடு, புலிகுன்னு பகுதியை சேர்ந்த அஷ்கர் (37), புலிப்பாடம் பகுதியை சேர்ந்த முஜிப் ரகுமான் (32) ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: