ரூ.3 லட்சம் மதிப்புள்ள 580 கிலோ புகையிலை பொருட்களுடன் இருவர் கைது

அவிநாசி : அவிநாசி அருகே ஆட்டையாம்பாளயம் கார் மெக்கானிக் ஒர்க்ஷாப்பில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை வைத்திருந்த இருவரை அவிநாசி போலீசார் கைது செய்தனர்.அவிநாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில்  தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் பதுக்கி வைத்து  விற்பனை நடைபெறுவதாக, அவிநாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து,  அவிநாசி போலீஸ் டி.எஸ்.பி. பவுல்ராஜ் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையில், எஸ்ஐக்கள் லோகநாதன், கோவிந்தம்மாள், அமுல்ஆரோக்கியராஜ், கோவிந்தராஜ், மற்றும் போலீசார் குழுவினர் ஆட்டையாம்பாளையம் கார் ஒர்க்ஷாப்  பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சவுகத்அலி மகன் தர்வேஸ்முகைதீன்(36), மற்றும் சேவூரைச்சேர்ந்த முகமதுபஷீர் மகன் ஜெயிலாபுதீன்(48) ஆகியோரிடமிருந்து  சுமார் 80 கிலோ எடையுள்ள புகையிலைபொருட்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் போத்தம்பாளையத்தை சேர்ந்த  செல்வராஜ் மகன் ஹர்ஷத் என்கிற திருமூர்த்தி(31) யின் வீட்டில் பதுக்கிவைத்திருந்த சுமார் 500 கிலோ எடையுடைய  தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் நேற்று   பறிமுதல் செய்தனர். இந்த புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூபாய் மூன்று லட்சமாகும்.  

இது தொடர்பாக அவிநாசி போலீசார் வழக்கு பதிவுசெய்து, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த  சவுகத்அலி மகன் தர்வேஸ்முகைதீன்(36) மற்றும் சேவூரைச் சேர்ந்த  முகமது பஷீர் மகன் ஜெயிலாபுதீன்(48) ஆகியோரை கைது செய்தனர். மேலும், போத்தம்பாளையத்தை சேர்ந்த  செல்வராஜ் மகன் ஹர்ஷத் என்கிற திருமூர்த்தி(31) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: