ஜெகதாப் கிராமத்தில் கருவாட்டு பொறி செயல்விளக்கம்

காவேரிப்பட்டணம் : வாழவச்சனூரில் வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் இறுதியாண்டு மணவர்கள் 11 பேர் கொண்ட குழு, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் தங்கி கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தை கற்று வருகின்றனர். காவேரிப்பட்டணம் அருகே ஜெகதாப் கிராமத்தில் கருவாட்டுப் பொறி செய்வது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இந்த கருவாட்டு பொறியானது சோளம், கம்பு போன்ற பயிர்களை தாக்கும் குருத்து ஈக்களையும், பூசணி வகை பயிர்களை தாக்கும் பழ ஈக்களையும் கவர்ந்து அழிக்கிறது. இதற்கு 5 கிராம் ஈரப்பதமுள்ள கருவாட்டை சிறு துண்டுகளாக வெட்டி, அதனை மேற்பகுதியில் நான்கு புறமும் துளையிடப்பட்ட ஒரு பிளாஸ்டிக்  தண்ணீர் பாட்டிலில் போட்டு பாட்டிலின் பாதி அளவிற்கு நீரை நிரப்ப வேண்டும். இந்த பொறியில் இருந்து வரும் வாசனையால், ஈக்கள் கவரப்பட்டு உள்ளே நீரில் விழுகின்றன. இவ்வாறு செய்வதால் பூச்சிகள் கவரப்படுகின்றன என்றனர்.

Related Stories: