பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்பட திரையிடலில் திருமாவளவன் பேச்சு

சென்னை: திமுகவையும், திராவிடத்தை எதிர்ப்பது மட்டுமே தமிழ் தேசியம் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிபிசி தயாரித்த பிரதமர் மோடி குறித்த பிரபல ஆவணப்படம் தமிழாக்கம் செய்யப்பட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் திரையிடப்பட்டது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர் தமிழ்நாட்டில் சனாதன எதிர்ப்பு அரசியல் வலுவாக இருப்பதாக கூறினார். சனாதனத்தை எதிர்ப்பது தான் தமிழ் தேசியத்தின் அங்கம் என அவர் கூறினார். திமுகவையும், திராவிடத்தை எதிர்ப்பது திரிபு வாதம் என்றார். அப்படி செய்வது சனாதனத்திற்கு துணைபோவதற்கு சமம் எனவும் அவர் விமர்சித்தார். மீண்டும் ஒருமுறை மோடி பிரதமர் ஆனால் இந்த நாடு என்ன ஆகும் என்பது தான் நம் முன்னாள் இருக்கின்ற கேள்வி என்றும் திருமாவளவன் பேசினார்.

Related Stories: