சங்கராபுரம் அருகே கோவில் பசுவுக்கு வளைகாப்பு: மேளதாளம் முழங்க சீர்வரிசையுடன் வந்த பொதுமக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சினையுற்றிருந்த கோவில் பசுவுக்கு பொதுமக்கள் வளைகாப்பு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலப்பட்டு கிராமத்தில் திரிபுர சுந்தரியமை கோவிலுக்கு சொந்தமான பசு மாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை தட்டுகளை எடுத்துவந்தனர்.

பின்னர் சினையுற்றிருந்த கோவில் பசுவுக்கு சிறப்பு பூஜைகள் செய்து காலில் சலங்கை கட்டி வளையல்களை மாலையாக அணிவித்து விமர்சையாக வளைகாப்பு நடத்தினர். கோவில் பசுமாட்டிற்கு நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமனோர் கலந்து கொண்டனர். குழந்தையில்லாத தம்பதியினர் கலந்துகொண்டு பசுவுக்கு அன்னம் ஊட்டி, மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்தினர்.

Related Stories: