ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தீக்குண்டத்தில் இறங்கி வழிபாடு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பிரசித்திபெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அது முதல் கடந்த 10 நாட்களாக  அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்துவந்தன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மயான பூஜை கடந்த 3ம் தேதியும் நேற்று இரவு அம்மன்  திருவீதி உலாவும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 47 அடி நீளமுள்ள தீ குண்டத்தில் இறங்கி ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். முன்னதாக கோவிலில் அருளாளி பூப்பந்து உருட்டி குண்டத்தில் இறங்கி நிகழ்வை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து விரதமிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். குண்டம் திருவிழாவை காண கோவை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து  ஏராளமானோர் வந்திருந்தனர். 

Related Stories: