24 பேர் பலி..14,000 ஹெக்டேர் வனப்பகுதி தீயில் கருகி நாசம்: காட்டுத்தீயை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் உதவியை நாடும் சிலி..!!

சண்டியாகோ: சிலியில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ள நிலையில் தீயை அணைக்க சர்வதேச நாடுகளில் உதவியை அந்நாடு கோரியுள்ளது. சிலி நாட்டின் தென்மேற்கு பகுதியில் வெப்ப அலை வீசி வருவதன் காரணமாக காடுகள் தீப்பற்றி எரிகின்றன. காற்றின் வேகம் காரணமாக தீ பல இடங்களுக்கும் பரவி இருப்பதால் அதனை அணைக்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து நெருப்பை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதுவரை 14,000 ஹக்டேர் நிலங்கள் தீயில் கருகி உள்ளன. இந்த நிலையில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்திருப்பதாகவும் 550-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மேலும், தீயை அணைப்பதற்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டுள்ளார்.   

Related Stories: