பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது: அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கண்டனம்

லக்னோ: அனைவருக்கும் ஒரே மாதிரியான குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது. அரசியல் சாசனத்திற்கு முரணானது என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது. லக்னோவில் நேற்று நடந்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய கூட்டத்துக்கு பிறகு  வௌியிடப்பட்ட் அறிக்கை: இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனும் அவரருக்கு விருப்பமான மதத்தை பின்பற்ற அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முரணாக உள்ள பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த  ஒன்றிய பாஜ அரசு முயற்சிகளை செய்கிறது. பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்பவே இந்த சூழ்ச்சி செய்யப்படுகிறது. இந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: