குளியலறையில் தவறி விழுந்து காவலர் பலி

சென்னை: ராயபுரம் தம்பு லைன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் லோகேஷ் (38). பெரவள்ளூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலர். இவர் நேற்று காலை அலுவலகத்திற்கு செல்வதற்காக குளிக்க சென்றார். அவர் வெகு நேரமாகியும் வெளியே வராததால் அவரது மகன் உள்ளே சென்று பார்த்தபோது லோகேஷ் தரையில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்தார். அவரது தலையில் அடிபட்டு இருந்தது. அவரை ஸ்டாலின் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லோகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

Related Stories: