தவாக தலைவர் வேல்முருகன் பேச்சு அதிமுகவை அழிக்கும் வேலையில் பாஜ வெற்றி பெற்று வருகிறது

சென்னை:  திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் வேல்முருகன் கூறியதாவது, ‘‘அதிமுகவில் குழப்பத்தை உருவாக்கி அதில் லாபம் அடைய வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் அஜந்தா. அதில், சிறிது சிறிதாக பாஜ வெற்றி பெற்று வருவதாக பார்க்கிறேன். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலையை பாஜ கச்சிதமாக செய்து வருகிறது. உட்கட்சி விவகாரத்தில் தலையிடுவதில்லை என கூறும் அண்ணாமலை எதற்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரை எதற்காக மாறி மாறி சந்திக்க வேண்டும்.

அவர்களிடம், பஞ்சாயத்து பேசுவது எதற்காக. அதிமுக, திமுக என மாபெரும் கட்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக ஒழிக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் அஜந்தா. அதன் முன்னோட்டமாக அதிமுகவை அழிக்கும் வேலையை செய்து வருகிறது. அதில், சிறிது சிறிதாக பாஜ வெற்றி பெற்று வருவதாக தான் பார்க்கிறேன். பிற நிறுவனங்களை மிரட்டி அதானியிடம் விற்றுவிடுமாறு ஏற்பட்ட அரசின் நிர்பந்தம் காரணமாகவும் 50ஆண்டுகளில் ஏற்பட வேண்டிய வளர்ச்சி 5ஆண்டுகளிலேயே அதானி வளர்ச்சி அடைந்தார் என கூறினார்.

Related Stories: