பேனா வடிவ நினைவு சின்னம் விஷயத்தில் மலிவானவர்களிடம் இருந்து மலிவான விமர்சனமே வரும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்  கே.எஸ். அழகிரி நேற்று  வெளியிட்ட அறிக்கை: கலைஞருக்கு சென்னை  கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்திற்கு அருகில் கடலுக்கு மத்தியில் பேனா  வடிவ நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகைய முடிவை  எதிர்த்து அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.  

 மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு மும்பை மெரின் டிரைவ்  கடற்கரையில் சிலை அமைக்க முடிவு செய்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே.

திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசினால் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம்  நிறைவேற்றப்பட்டு மக்களின் பேராதரவு பெற்று வருவதைச் சகித்துக் கொள்ள  முடியாத காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை  விமர்சித்து வருகிறார்கள். இத்தகைய விமர்சனங்களை வைப்பவர்கள் யார் என்று  தமிழக மக்களுக்குத் தெரியும். மலிவான அரசியல்வாதிகளிடம் மலிவான  விமர்சனத்தைத் தான் எதிர்பார்க்க முடியும். 

Related Stories: