பஸ்-வேன் மோதியதில் மூன்று பேர் பலி

வெள்ளகோவில்: திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மருதாச்சலம் (50). இவர், மனைவி பிரமிளா (45), உறவினர் தேவி (55), அவரது மகன் லோகேஸ்வரன் (26), அனுரூபா (17), தர்சினிபிரியா (17) ஆகிய 6 பேர் நேற்று காலை வெள்ளகோவில் அருகே உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வேனில் திருப்பூர் திரும்பி கொண்டிருந்தனர்.

வெள்ளமடை பகுதியில் காலை 11 மணியளவில் வந்தபோது கோவையில் இருந்து கும்பகோணம் சென்ற அரசு பஸ்சும், வேனும் மோதிக் கொண்டன. இதில்பிரமிளா, லோகேஸ்வரன், தேவி ஆகிய மூவர் இறந்தனர்.

Related Stories: