பேருந்து நிலையத்தில் தூங்கிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவர் கைது

தாம்பரம்: தாம்பரத்தில் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை  தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு, பரனூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி நிலா. இவர்கள்  தாம்பரம் ரயில் நிலைய உலகத்தில் உள்ள பேருந்து நிலைய நடைமேடையில் தங்கி, கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பேருந்து நிலையத்தில் பாபு மற்றும் நிலா தூங்கிகொண்டிருந்த போது, நிலா அருகில் படுத்திருந்த இருதயராஜ் என்பவர், நிலாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருகில் படுத்திருந்த தனது கணவரிடம் நிலா கூறியுள்ளார். இதையடுத்து பாபு, இருதயராஜை தட்டி கேட்டுள்ளார் இதனால் அவர்கள் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, இருதயராஜ் தனது நண்பர் சவுந்தர்ராஜ் என்பவருடன் சேர்ந்து, பாபுவை கல்லால் தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்தார். இதனை கண்ட பொதுமக்கள் பாபுவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாம்பரம் போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, இருதயராஜ், சவுந்தர்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: