கச்சா எண்ணெய், டீசலுக்கு கொள்ளை லாப தடுப்பு வரி உயர்வு

புதுடெல்லி: கச்சா எண்ணெய், ஏற்றுமதி செய்யப்படும் டீசல், விமான பெட்ரோல் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் கொள்ளை லாப தடுப்பு வரியை ஒன்றிய அரசு அதிகரித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய், ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மற்றும் விமான பெட்ரோலுக்கு கொள்ளை லாப தடுப்பு வரியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒன்றிய அரசு விதித்து வருகிறது. இந்த வரி தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது.

 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப கொள்ளை லாப தடுப்பு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உள்நாட்டில் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய்க்கு ஒரு டன்னுக்கு வரி ரூ.5,050 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  இதுபோல், ஏற்றுமதி செய்யப்படும் டீசலுக்கு ஒரு லிட்டருக்கான வரி ரூ.5ல் இருந்து 7.5 ஆகவும், விமான பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.3.5ல் இருந்து ரூ.6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பு உடனடியாக நேற்று அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: