விதிமுறைகளை மீறியதாக 59 வழக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட இடங்களில்  அரசியல் கட்சியினர் பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள், கொடி கம்பங்கள், சுவர்  விளம்பரங்கள் அப்புறப்படுத்தாதவர்கள், முன் அனுமதியின்றி கூட்டம்  கூட்டுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து  வருகின்றனர். அதன்படி, தற்போது வரை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 59 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 122 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 115 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Related Stories: