கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே தைப்பூச திருவிழா கோலாகலம்: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

கிருஷ்ணகிரி: நாடுமுழுவதும் இன்று முருகர் திருக்கோவில்களில் தைப்பூச திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயக்கப்பள்ளி கிராமத்தில் அமைத்துள்ள ஸ்ரீ அஞ்சினேயர் சுப்பிரமணிசாமி திருக்கோவிலில் 86ம் ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு முருகருக்கு அலங்காரங்கள், அபிஷகங்கள், செய்யப்பட்டு வள்ளி தேவையனை காட்சியுடன் முருகர் அருள்பொழிந்து வருகின்றார். இந்த தைப்பூச திருவிழாவில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், மற்றும் கர்நாடக, ஆந்திர போன்ற பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுமார் 50,000க்கு மேற்பட்ட பத்தர்கள் காலை முதலே முருகர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக குவிந்துள்ளனர்.

இவர்கள் தவிர மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகருக்கு நேத்தி கடன் செலுத்தும் வகையில் காவடி எடுத்தும், பால் கூடம் ஏந்தியும், அலகு குத்தியும் பத்தர்கள் நடைபயணமாக கோவிலுக்கு வந்த வன்னம் உள்ளனர். காலை முதல் இதுவரை சுமார் 50,000க்கு மேற்பட்ட பத்தர்கள் அங்கு குவித்துள்ளார்கள். நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து முருகரை வழிபட்டு செல்கின்றார்கள்.

பத்தர்களின் வருகைக்கு ஏற்றதுபோல் வழி பாதைகளிலும் பொதுமக்கள் அன்னதானம், நீர், மோர், போன்றவற்றை வழங்கி வருகின்றனர். குறிப்பாக 86ம் ஆண்டாக இந்த தைப்பூச திருவிழா கொண்டாப்பட்டு வந்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தோற்றால் பொதுமக்கள் வருகை எதுவும் இல்லாமல் காட்சி அளித்துவந்துள்ளது . இந்த ஆண்டு இயல்பு நிலை திரும்பிருக்கும் நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் முருகரை வழிபாடு செய்து வருகின்றர்கள்.

பத்தர்கள் வசதிக்கேற்ப பேருந்துகளும் இயக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணகிரி துணை கண்காணிப்பு ஆய்வாளர் தலைமையில் மூன்று ஆய்வாளர் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தைப்பூச திருநாளை முன்னிட்டு தற்பொழுது நீண்ட வரிசையில் காவடிகளுடன் அரோகரா, என்ற முழக்கத்துடன் தரிசனம் செய்து வருகின்றார்கள். இன்று மாலை திருத்தேர் விழா நடைபெறவிருக்கிறது.

அதனை தொடர்ந்து இனி 7 நாட்களுக்கு புகழ்பெற்ற மாட்டுச்சந்தை நடப்பது வழக்கம், நாளை முதல் மாட்டுச்சந்தை துவங்கி 7 நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. இது தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மாட்டுக்கு விற்பனை செய்யக்கூடிய, மாட்டின் உரிமையாளர்களும் மாடுகளை வாங்குவதற்கு வியாபாரிகளும் இந்த சந்தைக்கு வருகை புரிகின்றனர். இன்று முதல் 7 நாட்களுக்கு இந்த தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறவிருக்கிறது.      

Related Stories: