தைப்பூசத் திருநாளையொட்டி திருச்சியில் ஆண்டுக்கு ஒருமுறை 6 திருக்கோவில் சுவாமிகள் சந்திக்கும் வைபவம்: பெருந்திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: தைப்பூசத் திருநாளையொட்டி பூசத்தை முன்னிட்டு வயலூர் சோமரசம்பேட்டை சந்திப்பில், கற்குடி மாமலையராக விளங்கும் உஜ்ஜீவநாதர் சுவாமி தன்னுடைய பிள்ளையாக விளங்குகின்ற வயலூர் முருகன், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன், அல்லித்துறை பார்வதீஸ்வரர், பொம்மசமுத்திரம் காசிவிஸ்வநாதர் மற்றும் உறையூர் சீனிவாசப்பெருமாள் ஆகிய ஐந்து ஊர்களைச் சேர்ந்த தெய்வங்களும் தங்களது தந்தையையும் பிற தெய்வங்களையும் கண்டு வணங்கி செல்லும் வைபவம் நடைபெற்றது.

பின்னர் தெய்வங்கள் யாவும் அல்லித்துறை, மணிகண்டம், சோமரசம்பேட்டை, அதவத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு நேரடியாக சென்று காட்சியளித்து பின்னர் மாலை தத்தம் கோவில்களுக்கு சென்றடையும். வருடத்திற்கு ஒருமுறை 6 திருக்கோவில்களைச் சேர்ந்த சுவாமிகள் ஓன்றோடு ஒன்று சந்திக்கும் இத்தகைய சிறப்பு வாய்ந்த வைபவத்தை காண திருச்சியை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமிகளை ஒருசேர தரிசனம் செய்தனர்.

Related Stories: