பொள்ளாச்சி மார்க்கெட்டில் வெற்றிலை தொடர்ந்து கடும் விலை உயர்வு: ஒரு கட்டு ரூ.3100க்கு விற்பனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்றும், வெற்றிலை வரத்து குறைவாக இருந்ததால், ஒரு கட்டு ரூ.3100 வரை ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளியூர்களில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பனிப்பொழிவால், வெற்றிலைகளின் எண்ணிக்கை குறைந்து, அறுவடை பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த சில வாரமாக மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் வெற்றிலை கட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இதையடுத்து இந்த வாரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், வெற்றிலை வரத்து குறைவாக இருந்தது. ஆனால், வெற்றிலையை வாங்க வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர். இதன் காரணமாக,  கூடுதல் விலைக்கு ஏலம் போனது. சுமார் 6500 வரையிலும் உள்ள  வெற்றிலை கட்டு ஒன்று ரூ.1800 முதல் அதிகபட்சமாக ரூ.3100 வரை வரையிலும் என தொடர்ந்து கூடுதல் விலைக்கு ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: