கோழிக்கரை கிராமத்தில் காட்டுயானைகள் முகாம் ; பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரி: கோத்தகிரி அருகே உள்ள கோழிக்கரை பழங்குடியின கிராம குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகள் கூட்டம் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, மாமரம், முள்ளூர், கோழிக்கரை ஆகிய பழங்குடியின கிராமங்கள் உள்ளது.

கோழிக்கரை பழங்குடியின கிராமம் வழியாக மேல்கூப்பு, கீழ்கூப்பு, செம்மநாரை, வாகப்பனை, அட்டடி, கோழித்தொரை உள்ளிட்ட கிராம மக்கள் சென்று வரும் நிலையில், தற்போது சாலையோர காப்பி, தேயிலை தோட்டங்களில் காட்டு யானை கூட்டம் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் வாகன ரோந்து மேற்கொண்டு குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: